Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுக்கு இணக்கப்பாடு அவசியம்: ரிஷாட் பதியுதீன்

In இலங்கை
Published: 11:23 GMT, Jan 3, 2018 |
0 Comments
1233
This post was written by : Elakkiya

முஸ்லிம் மக்களுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்தினால் மாத்திரமே தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு சாத்தியமாகும் என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக பேசுவதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருக்கு அழைப்பு  விடுத்திருந்த போதிலும் அதனை அவர்கள் நிராகரித்து விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலுக்கான பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றிருந்த ரிஷாட் பதியுதீன் அதன் பின்னர் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போதே இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “அரசியல் தீர்வை பெற்றுத்தருவோம் என ஆட்சிக்கு வந்தவர்கள் நிச்சயம் தமிழ்க் கூட்டமைப்பினரே. அவர்கள் எத்தகைய ஒரு தீர்வை பெற்றுக் கொள்வதாக இருந்தாலும் வட கிழக்கிலுள்ள முஸ்லிம்களின் விருப்பம், சந்தேகங்களை களைந்து இணக்கப்பாட்டுடன் செயற்படவேண்டும். அவ்வாறு செயற்பட்டால் மாத்திரமே தீர்வு சாத்தியமாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “ஒன்றுபட்டு செயற்படும் விடயங்களில் நாம் ஒன்று பட வேண்டும். சிறுபான்மை மக்களை பாதிக்கும் என கடந்த தேர்தலின் போது பலமுறை வேண்டுகோள் விடுத்திருந்தோம். அவர்கள் காதுகளுக்கு எமது வேண்டுகோள் எட்டவில்லை. அரசுடன் சேர்ந்து ஆட்சியை கொண்டுவந்தார்கள். 4 தசாப்தமாக மக்களிடத்தில் தீர்வை பெற்று தருவதாக கூறி வருகின்றார்கள். இன்னும் தீர்வுக்கான வழியை ஏற்படுத்தவில்லை” என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg