Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்திய அணிக்கு பின்னடைவு: டெஸ்ட் போட்டியில் பிரபல வீரர் விளையாடுவது சந்தேகம்

In கிாிக்கட்
Published: 11:50 GMT, Jan 3, 2018 |
0 Comments
1174
This post was written by : Anojkiyan
jad

இந்தியக் கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான ரவிந்திர ஜடேஜா, வைரஸ் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதனால் எதிர்வரும் 5ஆம் திகதி கேப்டவுணில் ஆரம்பமாகவுள்ள தென்னாபிரிக்க அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு நாட்களாக வைரஸ் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ள ஜடேஜா, தற்போது மருத்துவ சிகிச்சை பெற்றுவருவதாகவும், அவரின் உடல்நிலை மற்றும் உடற்தகுதி பரிசோதனையின் பின் அவர் டெஸ்ட் போட்டியில் பங்கேற்பது உறுதிசெய்யப்படும் என இந்தியக் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

தென்னாபிரிக்க அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில், சாதிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜடேஜா, தற்போது விளையாடுவதே சந்தேகத்திற்கிடமாகியுள்ள நிலையில், இந்த நிலை இந்திய அணிக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg