Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எனது அணு பொத்தான் மிகச் சக்திவாய்ந்தது – ட்ரம்ப்

In
Published: 11:23 GMT, Jan 3, 2018 |
0 Comments
1083
This post was written by : Suganthini
nuclear

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்னின் அணுவாயுதப் பொத்தானை விட, தனது அணுவாயுதப் பொத்தான் மிகவும் பெரியதென்பதுடன், சக்திவாய்ந்ததெனவும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அணுவாயுதத் தாக்குதலை எவ்வேளையிலும் ஆரம்பிக்கும் வகையில், தனது மேசையில் அணுவாயுதப் பொத்தான் பொருத்தப்பட்டுள்ளதாக வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் புத்தாண்டுச் செய்தியில் தெரிவித்திருந்தார். இவரது கருத்துக்குப் பதிலளிக்கும் வகையில், தனது டுவீட்டர் செய்தியில் நேற்று (செவ்வாய்க்கிழமை)  அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் இதனைப் பகிர்ந்துள்ளார்.

அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா அணுவாயுதச் சோதனை மற்றும் ஏவுகணைச் சோதனைகளை நடத்திவரும் நிலையில், வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோருக்கிடையில் அவ்வப்போது அநாவசியமான கருத்துகளும் பரிமாற்றப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg