Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீடம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது

In இலங்கை
Updated: 11:39 GMT, Jan 3, 2018 | Published: 11:39 GMT, Jan 3, 2018 |
0 Comments
1080
This post was written by : Elakkiya
Naajim-VC-01

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் தொடர் மறியல் போராட்டம் காரணமாக பொறியியல் பீடம் காலவரையறையின்றி மூடப்படுவதாக பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜிம் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக பீடாதிபதிகளுடன் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும், இது தொடர்பாக மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி பொறியியல் பீட மாணவர்களுக்கு பல்கலைக்கழக வளாகம் தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியுள்ள பொறியியல்பீட மாணவர்களை அங்கிருந்து வெளியேறுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொறியியல்பீட மாணவர்களில் ஒரு தொகுதியினர் விடுதிகளிலிருந்து வெளியேறியுள்ள போதிலும் மற்றுமொரு தொகுதியினர் தொடர்ந்தும் பல்கலைக்கழக நிர்வாக கட்டடத்தினுள் மறியல் போராட்டத்தில்  ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் தொழில்நுட்பவியல் பீடங்களைச் சேர்ந்த ஐந்து மாணவர்களுக்கு, பல்கலைக்கழக நிர்வாகத்தினால் விதிக்கப்பட்டுள்ள வகுப்புத் தடையினை ரத்துச் செய்யுமாறு கோரி மேற்படி இரண்டு பீடங்களையும் சேர்ந்த மாணவர்கள் கடந்த புதன்கிழமை முதல் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg