Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆரம்பிக்கும் மூன்றாம் உலகப்போர்! – மனித குலம் வீதிகளில் கோரமாக கொல்லப்படும்!

In அறிவியல்
Updated: 11:43 GMT, Jan 3, 2018 | Published: 11:43 GMT, Jan 3, 2018 |
0 Comments
1722
This post was written by : Puvanes

உலகம் அழியப்போகின்றது அல்லது ஆபத்தை எதிர்நோக்குகின்றது என்றக் கதைகள் முற்று பெற்றுவிட்டன. எப்போதும் போல இப்போதும் மக்களிடையே பீதிகளை ஏற்படுத்திவிட்டு அந்தச்செய்திகள் மறைந்துவிட்டன.

ஆனாலும் இப்போதைய உலகம் ஓர் அழிவுப்பாதையை நோக்கியே நகர்ந்து கொண்டிருப்பதாக பிரபல விஞ்ஞானிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர். அந்தவகையில் உலகத்திற்கு அழிவை ஏற்படுத்தப்போவது வேற்றுக்கிரகவாசிகளோ அல்லது அனர்த்தங்களோ அல்லது கிரகமோதல்களோ இல்லை.

ஆனால் மனிதர்களின் கண்டுபிடிப்பே அவர்களுக்கு எமனாகும் என்பது விஞ்ஞானிகளின் ஆணித்தரமான நம்பிக்கை. அப்படி என்றால் அவற்றை கண்டுபிடிப்பதே விஞ்ஞானிகள் தானே என எதிர்கேள்வியை முன்வைத்துவிடவேண்டாம்.

கண்டுபிடிப்புகள் இருவகைப்படும் ஆக்குவது, அழிப்பது அதில் இதுவரையிலும் ஆக்கக் கண்டுபிடிப்புகள் அதிகம் வந்தன ஆனால் இப்போது அழிவை நோக்கி அவை நகர்கின்றன.

குறிப்பாக செயற்கை துண்ணறிவு (Artificial intelligence) எனப்படும் கண்டு பிடிப்புகளை நோக்கி அதிவேகமாக அறிவியல் நகர்கின்றது. அது மனித குலத்தின் எதிரியாகும் என்பது பிரபல விஞ்ஞானி ஸ்டீபன்ஹாக்கிங் கூறிவரும் தகவல்.

அதேபோன்று அவரைப் போலவே செயற்கை நுண்ணறிவு வளர்ச்சிக்கு எதிராக கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார் எலான் மக்ஸ் இவர் ஆய்வாளர், கண்டுபிடிப்பாளர் மட்டுமல்ல டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய பிரபல்ய நிறுவனங்களின் நிறுவுனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தெருக்களில் மனித குலம் கோரமாக ரோபோக்களினால் கொல்லப்படும் நாள் உருவாகும். அதற்கு வழி செய்வது இந்த செயற்கை நுண்ணறிவு அந்தநாள் வரும் வரையிலும் நான் எச்சரிக்கை விடுத்துக்கொண்டே இருப்பேன் என அவர் கூறியுள்ளார்.

இந்த செயற்கை நுண்ணறிவானது மனித குலத்தின் பாதுகாப்பை உறுதிசெய்யும் என்பதில் மிகுந்த கவனம் தேவை. மாறாக கணக்கற்ற நிறுவனங்களுக்கு இந்தத் திட்டம் செல்வதை தடை செய்யவேண்டும் எனவும் எலான் கூறியுள்ளார்.

எப்படி மறுப்புகள் வெளியிடப்பட்டாலும், மூன்றாம் உலகப்போருக்கான பாதையினையே இந்த செயற்கை நுண்ணறிவு தள்ளிக்கொண்டு செல்கின்றது என்பது எலான் கூறும் தகவல்.

இது சாத்தியமா? என்ற கேள்வி எழும்போது ஆம் என்றே மறைமுகமாக விஞ்ஞானிகள் ஏற்றுக்கொள்கின்றனர்.

செயற்கை அறிவுத்திறன் அல்லது நுண்ணறிவு என்பது கணினி அல்லது இயந்திரங்கள் ஆகியனவற்றை வைத்துக்கொண்டு நுண் அறிவை உருவக்குகின்ற முறை ஆகும். மனிதர்களுக்கு ஒத்த அல்லது மனிதர்களைவிட அறிவுத்திறன் கொண்ட கணிப்பொறிகளை உருவாக்குவதே இத்துறையின் நோக்கம்.

இத்துறை கணினி அறிவியலின் ஒரு பிரிவாகும். தமிழில் செயற்கை அறிவுத்திறனை செயற்கை நுண்ணறிவு, செயற்கை அறிவாண்மை என்றும் குறிப்பிடப்படுகின்றது. அதன்படி தனித்து சிந்தித்து முடிவெடுக்கும் ஆளுமை கொண்ட ரோபோக்கள் உருவாக்கப்படும் என்பதே ஆச்சரியம்.

அதன்படி சென்றால் உலகமும் மனித இனமும் இயந்திரங்களுக்கு அடிமைப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதே மாபெரும் விஞ்ஞானிகளின் தகவல். எனினும் இந்த செயற்கை நுண்ணறிவு திட்டத்தினை வல்லரசு நாடுகள் செய்தவாறே உள்ளது என்பது வேதனை.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg