Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

2017 திரையுலக பயணத்தின் வெற்றிகரமான ஆண்டு: காஜல்

In சினிமா
Updated: 11:39 GMT, Jan 3, 2018 | Published: 11:39 GMT, Jan 3, 2018 |
0 Comments
1132
This post was written by : Risha

திரை உலக பயணத்தில் நம்பிக்கை மிகுந்த வெற்றிகரமான முக்கியமான ஆண்டாக 2017ஆம் ஆண்டு அமைந்துள்ளது என தமிழ், தெலுங்கு திரையுலகில் முக்கிய இடம்பிடித்துள்ள காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.

2017ஆம் ஆண்டின் வெற்றி, தோல்விகள் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பத்தாண்டுகளுக்கு மேலாக திரையுலகில் முக்கிய இடம்பிடித்துள்ள தனக்கு, கடந்த ஆண்டு நம்பிக்கை கொடுத்த வெற்றிகரமான வருடமாக அமைந்ததாக தெரிவித்தார்.

மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவே இல்லை எனக் குறிப்பிட்ட காஜல், அந்த வாய்ப்பு ‘கைதி எண் 150’ படத்தில் கிடைத்ததாகவும், ராணாவுடன் ‘நேனா ராஜு நேனே மந்திரி, படத்தில் நடித்ததாகவும் குறிப்பிட்டார்.

அதுமாத்திரமின்றி தமிழில் அஜித்துடன் ‘விவேகம்’ விஜய்யுடன் ‘மெர்சல்’ படங்களில் நடித்தாகவும், இப்படி ஒரே ஆண்டில் பல பிரபல நட்சத்திரங்களுடன் நடிக்க கிடைத்தமை பாரிய வெற்றியாகும் எனவும் கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg