Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வித்தியா வழக்கின் முதலாம் எதிரியின் விளக்கமறியல் நீடிப்பு

In இலங்கை
Published: 12:08 GMT, Jan 3, 2018 |
0 Comments
1144
This post was written by : Elakkiya

பொலிஸ் உத்தியோகத்தரை அச்சுறுத்திய வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் முதலாம் எதிரியாக இனங்காணப்பட்டு விடுவிக்கப்பட்ட பூபாலசிங்கம் இந்திரகுமாரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் உத்தியோகத்தரை அச்சுறுத்தியமை தொடர்பான விசாரணை இன்று (புதன்கிழமை) ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்றிருந்த நிலையில் அவரை எதிர்வரும் 17 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நிதிவான் ஏ.எம்.எம்.றியால் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், குறித்த வழக்கானது சாட்சியை அச்சுறுத்திய குற்றச்சாட்டின் பிரகாரம் இடம்பெறுவதால் சந்தேக நபருக்கு ஏன் பிணை வழங்க மறுக்கக் கூடாது என்பது தொடர்பாக எழுத்து மூல அறிக்கையை தாக்கல் செய்யுமாறும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

வித்தியா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பூபாலசிங்கம் இந்திரகுமார் ட்ரயல் அட்பார் நீதிமன்றால் குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg