Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உதவித்தொகை நிறுத்தத் தீர்மானம்: பலஸ்தீனம் கண்டனம்

In உலகம்
Published: 12:02 GMT, Jan 3, 2018 |
0 Comments
1075
This post was written by : Suganthini
palas

பலஸ்தீனத்துக்கு அமெரிக்கா வழங்கிவந்த உதவித்தொகையை எதிர்காலத்தில் நிறுத்தும் சாத்தியம் காணப்படுவதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்த கருத்துக்கு, பலஸ்தீனம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இன்று (புதன்கிழமை) கருத்து வெளியிட்ட பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூட் அபாஸின் பேச்சாளர் நபில் அபு ரடைனா (Nabil Abu Rdainah), ‘கடந்த 2014ஆம் ஆண்டு இஸ்ரேலுடன் முறிந்த பேச்சுவார்த்தையைத் மீண்டும் தொடர்வதற்கு பலஸ்தீனம் எதிர்க்கவில்லை. ஆனால், சமாதானம் மற்றும் நலன்களைப் பற்றி அமெரிக்கா ஆர்வத்துடன் இருந்தால், அது அதனுடன் கடைப்பிடிக்க வேண்டும்’ என்றார்.

இஸ்ரேலுடன் நிலையான சமாதானப் பேச்சுவார்த்தைக்கு பலஸ்தீனம் ஒத்துழைக்காவிடின், அந்நாட்டுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை நிறுத்த எண்ணியுள்ளதாக, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பலஸ்தீனத்துக்கு எச்சரித்திருந்தார். இதனையடுத்து, பலஸ்தீனம் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg