Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்கும் முக்கியஸ்தர் யார்? – வெடிக்கும் புதிய சர்ச்சை!

In இலங்கை
Updated: 12:39 GMT, Jan 3, 2018 | Published: 12:21 GMT, Jan 3, 2018 |
0 Comments
1462
This post was written by : Puvanes
maithri001

மத்திய வங்கியில் இடம்பெற்ற பாரிய ஊழல் தொடர்பில் ஜனாதிபதி இன்று (புதன்கிழமை) வெளியிடவுள்ள விஷேட அறிவிப்பை தடைசெய்ய கொழும்பு அரசியல் முக்கியஸ்தர் ஒருவர் ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுத்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஊழல், பாரிய மோசடி, அரச வளங்கள் மற்றும் அதிகாரங்களைத் தவறாக பயன்படுத்தியமை தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து ஊழலில் ஈடுபட்டவர்கள் தொடர்பான செய்திகள் ஜனாதிபதியின் விஷேட அறிவிப்பில் அம்பலப்படுத்தப்படும் என்ற சூழல் உருவாகியுள்ளதோடு எதிர்பார்ப்புகளையும் அதிகரித்துள்ளன.

இந்தநிலையில் குறித்த ஜனாதிபதியின் அறிவிப்பினால் தேர்தல் அண்மித்துவரும் நிலையில் தனது தரப்பிற்கு சிக்கல் ஏற்படும் என்பதால் ஜனாதிபதிக்கு ஊழல் தொடர்பில் அறிவிப்பு எதனையும் விடுக்க வேண்டாம் என கொழும்பு அரசியல் பிரபலம் ஒருவர் முயற்சி செய்து வருவதாக சிங்கள ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

மேலும் இந்த விடயம் தொடர்பாக கொழும்பு அரசியல் முக்கியஸ்தர், பிரபல வர்த்தகப்புள்ளி ஒருவரின் துணையுடன் ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாகவும் குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், தேர்தல் ஆணையகம் ஜனாதிபதி தரப்பிற்கு வழங்கியுள்ள ஆலோசனைக்கு அமைய ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுப்பவர்களின் பெயர்களை ஜனாதிபதி தரப்பு வெளியிட மறுத்து வருவதாகவும் கூறப்படுகின்றது.

எவ்வாறாயிலும் மத்திய வங்கி ஊழல் தொடர்பில் பல விடயங்கள் ஜனாதிபதியின் மூலம் அம்பலமாக்கப்படும் என்ற எதிர்பார்ப்புக்கள் காணப்படுவதால் இந்த ஊழலுடன் தொடர்புடைய அரசியல் முக்கியஸ்தர் உட்பட அவர் தரப்பு நெருக்கடியில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, மத்தியவங்கி ஊழல் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தரப்பினர் மீது தொடர்ந்தும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வந்தன என்பதோடு, அவர்கள் மீது ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளையும் மேற்கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg