Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வாக்குகளுக்காக மதுபானம் கொடுக்கும் பொதுஜன முன்னணி?

In இலங்கை
Published: 13:32 GMT, Jan 3, 2018 |
0 Comments
1160
This post was written by : Puvanes
podujana001

பொதுஜன முன்னணி மாத்தளை நாவுல தொகுதியில் மதுபான விநியோகிப்பு மூலமாக வாக்குகளை சேகரிக்க திட்டமிட்டுவருவதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாத்தளை மாவட்ட அமைப்பாளர் சுசில் பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.

மாத்தளையில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகசந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

மேலும், குறிப்பாக கிராமிய மட்டங்களில் உள்ள இளைஞர்களை இலக்கு வைத்து மதுபான பகிர்ந்தளிப்பில் பொதுஜன முன்னணி ஈடுபடவுள்ளதாகவும் சுசில் தெரிவித்துள்ளார்.

இந்தவிடயம் தொடர்பாக மாத்தளை மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது எனக்குறிப்பிட்ட சுசில், நேர்மையானதும், நீதியானதுமான தேர்தல் நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

சட்டவிரோத தேர்தல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனவும், நாவுல பிரதேசத்தில் உள்ள பிரபல வர்த்தக நிறுவனம் ஒன்றும் இந்த நடவடிக்கையுடன் தொடர்பு பட்டுள்ளது எனவும் சுசில் மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg