Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பலத்தபாதுகாப்புக்கு மத்தியில் பிள்ளையான்!

In இலங்கை
Updated: 14:39 GMT, Jan 3, 2018 | Published: 14:39 GMT, Jan 3, 2018 |
0 Comments
1245
This post was written by : Puvanes

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை குறித்த வழக்கு விசாரணைகள், பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று (புதன்கிழமை) மீண்டும் ஆரம்பமானது.

சட்டமா அதிபர் திணைக்களத்தினால் மேல் நீதிமன்றத்தில் தாக்குதல் செய்யப்பட்ட மனுவிற்கு அமைய குறித்த வழக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது பிள்ளையான் உட்பட சந்தேகநபர்கள் 6 பேரும், மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாக்கப்பட்டனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கடந்த 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி தேவாலயத்தில் படுகொலை செய்யப்பட்டார்.

இதில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் பிள்ளையான் என அழைக்கப்படும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இன்று மீண்டும் விசாரணை காலை 10 மணிக்கு ஆரம்பமாகி பிற்பகல் 5.30 மணிவரை இடம்பெற்றது தொடர்ந்தும் நாளை (வியாழக்கிழமை) விசாரணைகள் இடம்பெறவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

pillayan001 pillayan002

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg