Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நாடாளுமன்ற அதிகாரம் பிரதமரின் கைகளில்!

In இலங்கை
Published: 16:02 GMT, Jan 3, 2018 |
0 Comments
1455
This post was written by : Puvanes
ranil001

நாடாளுமன்றத்தினை அவசரமாக கூட்டும் அதிகாரம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் பகிரப்பட்டுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கூட்டு எதிர்க்கட்சியில் அங்கத்துவம் வகிக்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன மஹிந்த அணிசார்பில் நாடாளுமன்றத்தை அவசரமாக கூட்டுமாறு சபாநாயகரிடம் விடுத்த கோரிக்கை தொடர்பாக இன்று (புதன்கிழமை) சபாநாயகர் அலுவலகம் வெளியிட்ட தகவலிலேயே மேற்கண்ட விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தின் பொருளாதார நிலைமைகள், சமகால அரசியல் பிரச்சினைகள், நடப்புகள் சார்ந்த விடயங்களை ஆலோசிக்கவே குறித்த கோரிக்கை தினேஷ் குணவர்தன மூலமாக விடுக்கப்பட்டது.

அதன்படி மஹிந்த அணியின் கோரிக்கை தொடர்பான தற்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது எனவும் சபாநாயகர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg