Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கடவுள்கள் எனப்படுபவர்கள் யார்? – இப்போதும் வசிக்கின்றார்களா?

In அறிவியல்
Updated: 16:41 GMT, Jan 3, 2018 | Published: 16:41 GMT, Jan 3, 2018 |
0 Comments
1545
This post was written by : Puvanes

ஆரம்பகாலத்தில் பல்வேறு அசாத்தியங்களை புரிந்தவர்களும், சக்திகள் படைத்தவர்களும் உலகில் காணப்பட்டனர் அவர்கள் யார்? அவர்களுக்கு அத்தகைய சக்திகள் எங்கிருந்து வந்தன?

இந்தக் கேள்விகளுக்கான பதில் ஆன்மீகத்தின் பார்வையில் கடவுள்கள் அல்லது தேவதூதர்களுக்கு அதிகப்படியான சக்திகள் இருந்தன என்றே முன்வைக்கப்பட்டு வரும். எனினும் அறிவியலின் பார்வையில் கடவுள்கள் அல்லது தேவதூதர்களாக வர்ணிக்கப்படுபவர்களும் மனிதர்களே எனக் குறிப்பிடப்படுகின்றது.

ஆரம்பகாலத்தில் உலகில் பௌதீக விதிகளை மீறும் சக்தி கொண்டவர்கள் சிலர் காணப்பட்டனர். அவர்களே தற்போது கடவுள்களாக வணங்கப்படுகின்றனர். எனினும் அத்தகைய சக்தி படைத்தவர்கள் புலன் புறத்தெரிவு (Extrasensory perception) அல்லது ஆறாம் அறிவு (sixth sense) எனப்படும் ஆற்றல் கொண்டே பௌதீக விதிகளுக்கு முரணாக நடந்து கொண்டுள்ளார்கள் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

புறத்தெரிவு என்பது பெளதீக புலன் உணர்வின் ஊடாக தகவல் அறியப்படாது மனதினால் உணரப்படுதலைக் குறிக்கும். இந்த ஆற்றல் உள்ளவர்கள் இயற்கைக்கு மீறிய சக்திகளை கொண்டிருப்பார்கள்.

அவர்கள் காற்று, நிலம், நீர், ஆகாயம், நெருப்பு போன்றனவற்றை கட்டுப்படுத்தும் அல்லது இவற்றில் ஒன்றை கட்டும்படுத்தும் ஆற்றல் கொண்டிருப்பார்கள். ஒரு இடத்தில் இருந்து இன்னோர் இடத்திற்கு செல்வது, பறப்பது, உடல் எடையைக் கூட்டுவது அல்லது குறைப்பது போன்ற பலவகை ஆற்றல்கள் புறத்தெரிவு கொண்டவர்களுக்கு இருக்கும்.

அவ்வாறான சக்திகள் (ஆற்றல்) கொண்ட நபர்களே அப்போதைய மனிதர்கள் தம்மை காக்கும் தெய்வமாக வழிபட்டுள்ளனர் என ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளார்கள்.

தற்போதும் இவ்வாறான ஆற்றல் படைத்தவர்கள் உலகில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர் எனினும் மேம்பட்ட அறிவை மனித இனம் தற்போது பெற்றுக்கொண்டுள்ளதால் அவர்களை கடவுள்களாக மனித இனம் நோக்குவது இல்லை என ஆய்வாளர்கள் வாதிடுகின்றனர்.

பிரபஞ்சத்தில் எண்ண அலைகளின் பயணம், மனக்கட்டுப்பாடு, மூளையின் அதீத ஆற்றல் வெளிப்பாடு போன்றவற்றின் ஊடாக புறத்தெரிவைப் பெற்றுக்கொள்ளலாம். சாதாரணமாக ஒரு மனிதன் மூளையின் மிகச் சிறிய அளவு ஆற்றலையே உபயோகித்து வருகின்றான்.

அதில் இருந்து மாறுபட்டு மூளையின் ஆற்றலை அதிகரிக்கும் போது அது அதீத சக்திகளை, ஆற்றல்களை கொண்ட மனிதர்களாக மாற்றும் என்பது ஆய்வாளர்களின் கருத்து.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg