Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பொன்னாலை வரதராஜப் பெருமாள் வித்தியாசாலையில் தரம் 10,11ஐ ஆரம்பிக்க அனுமதி

In இலங்கை
Updated: 04:36 GMT, Jan 4, 2018 | Published: 03:25 GMT, Jan 4, 2018 |
0 Comments
1094
This post was written by : Elakkiya

பொன்னாலை வரதராஜப் பெருமாள் வித்தியாசாலையில் தரம் 10ஐ ஆரம்பிக்க வலியுறுத்தி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

இது தொடர்பாக வலயக் கல்விப் பணிமனையில் இடம்பெற்ற விசேட கூட்டத்தின்போது பொன்னாலை வரதராஜப் பெருமாள் வித்தியாசாலையில் இவ்வருடம் தரம் 10 வகுப்பை ஆரம்பிப்பது எனவும் அடுத்த வருடம் தரம் 11 வகுப்பை ஆரம்பிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டதை அடுத்து நேற்று (புதன்கிழமை) கவனயீர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டது.

நேற்றைய தினமே தரம் 10 மாணவர்களுக்கான கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

இப்பாடசாலையில், தற்போது தரம் 9 வரையே வகுப்புக்கள் இடம்பெறுகின்ற நிலையில், பாடசாலையில் க.பொ.த சாதாரண தர வகுப்புக்களை ஆரம்பிக்குமாறு பழைய மாணவர்களும் பெற்றோர்களும் பல வருடங்களாகக் கோரிக்கை முன்வைத்திருந்தனர்.

இப்பாடசாலையில் தரம் 9இல் கல்வி கற்றுவிட்டு வேறு பாடசாலைகளுக்குச் செல்பவர்கள் உரிய போக்குவரத்து வசதிகள் இன்மையால் இடைவிலகும் நிலையும் இதனால் பொன்னாலைக் கிராமம் கல்வியில் தொடர்ச்சியாகப் பின்னடைந்து செல்வதாகவும் பெற்றோர் கவலை தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

ponnalai1 (3) ponnalai1 (10) ponnalai1 (19)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg