Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜனாதிபதியின் வாள் பிரதமரை காப்பாற்றியுள்ளது: விஜித ஹேரத்

In இலங்கை
Updated: 03:45 GMT, Jan 4, 2018 | Published: 03:45 GMT, Jan 4, 2018 |
0 Comments
1138
This post was written by : Elakkiya
vijtha

ஜனாதிபதியின் வாள் பிரதமர் ரணிலை காப்பாற்றியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதேச சபையில் ஜே.வி.பி. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வு நேற்று (புதன்கிழமை) மாலை இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது, தூய்மையான அரசியலை உருவாக்கும் தனது போராட்டத்தில் தனது வாளால் யார் வெட்டப்படுகின்றார்கள் என்று தெரியாது என அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன கூறியதை சுட்டிக்காட்டிய விஜித ஹேரத், ஜனாதிபதியின் வாளால் ரணில் வெட்டுப்படவில்லை என்றும் அவர் காப்பாற்றப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.

பின்னர் மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை பலதரப்பட்ட எதிர்பார்ப்புகளின் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவால் நேற்றைய தினம் வெளியிடப்பட்டது.

இந்த அறிக்கையில், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜுன் மகேந்திரன், முன்னாள் நிதியமைச்சர் ரவிகருணாநாயக்க, அர்ஜுன் அலோசியஸ் ஆகியோருக்கு பிணைமுறி விவகாரத்தில் நேரடித் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

எனினும், மத்திய வங்கியின் ஆளுநரை நியமித்ததன் பொறுப்பு பிரதமர் ரணிலையே சாரும் எனவும் அவர் அதற்கு பதில் கூறவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பேசும் போதே விஜித ஹேரத் மேற்படி தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg