Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மீண்டும் அணித்தலைவராகிறார் மத்தியூஸ்

In கிாிக்கட்
Updated: 04:34 GMT, Jan 4, 2018 | Published: 04:34 GMT, Jan 4, 2018 |
0 Comments
1282
This post was written by : Anojkiyan

இலங்கையின் ஒருநாள் மற்றும் ரி-ருவென்ரி அணியின் தலைவராக மீண்டும் அஞ்சலோ மத்தியூஸ் நியமிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக மீண்டும் அஞ்சலோ மத்தியூசை நியமிப்பது குறித்து விளையாட்டுத்துறை அமைச்சானது, இலங்கை கிரிக்கெட் சபையுடன் கலந்துரையாடப்பட்டு வருகின்றது.

கடந்த மாதம் முதல் இலங்கை அணிக்கான பயிற்சி வழங்கும் நடவடிக்கைகளை புதிய தலைமைப் பயிற்சியாளர் சந்திக்க ஹத்துருசிங்க ஆரம்பித்து முன்னெடுக்கிறார்.

அவர் இன்னும் அணியின் வீரர்களுடன் பழகி வரும் நிலையில், புதிய அணித் தலைவரை நியமிப்பதா? இல்லையா? என்பது குறித்து கால அவகாசம் எடுத்தே தீர்மானிக்கப்படும்” என கூறினார்.

கடந்த ஆண்டு கத்துக்குட்டி அணியான சிம்பாப்வே அணியுடன் இலங்கை அணி படுதோல்வியடைந்ததன் பின்னர், அஞ்சலோ மத்தியூஸ் அணித்தலைவர் பதவியை இராஜினாமா செய்தார். இதனைதொடர்ந்து ஒருநாள் மற்றும் ரி-ருவென்ரி அணியின் தலைவராக உபுல் தரங்கவும், டெஸ்ட் அணியின் தலைவராக தினேஷ் சந்திமாலும் நியமிக்கப்பட்டனர்.

ஆனால், உபுல் தரங்க தலைமையிலான அணியின் செயற்பாடுகள் திருப்திகரமாக அமையவில்லை. இதனால் சகலதுறை வீரரான திசர பெரேரா அணித்தலைவராக நியமிக்கப்பட்டார் அவரது தலைமையிலும் இலங்கை அணி படுதோல்வியடைந்தது. இந்நிலையில் கடும் அதிருப்தியில் உள்ள இலங்கை அணி, நிலையான மற்றும் திறமையான அணித்தலைவரை நியமிக்க ஆலோசனை நடத்திவருகின்றது. இந்த வாய்ப்பு மீண்டும் மத்தியூஸூற்கு செல்லும் சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg