Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மக்கள் முன்னணியில் மதவாதத்துக்கு இடமில்லை: மணிவண்ணன்

In இலங்கை
Updated: 04:36 GMT, Jan 4, 2018 | Published: 04:26 GMT, Jan 4, 2018 |
0 Comments
1164
This post was written by : Elakkiya

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியில் மதவாதத்துக்கு இடமில்லை என தமிழ்த் தேசிய பேரவையின் யாழ்.மாநகர முதன்மை வேட்பாளர் வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக மதவாதத்தை ஏற்படுத்தும் செயற்பாடு இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. எங்களுடைய கட்சி மத சார்புக் கொள்ளைகள் எதனையும் ஏற்றுக் கொள்ளாது. எல்லா மதங்களும் சமமாக மதிக்கப்பட வேண்டும், அவர்களுக்கு உரிய கௌரவங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் நாம் செயற்படுகின்றோம். எங்களுடைய கட்சியில் மதவாதிகளுக்கு இடமில்லை” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் மதவாதம் பேசுபவர்களை இனங்கண்டு மக்கள் நிராகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதுடன் ஒற்றையாட்சி இடைக்கால வரைபினை நிராகரிக்கின்ற ஒரு மக்கள் ஆணையாக இந்தத் தேர்தலை தாம் அணுகுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg