Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிழக்கு மாகாண தமிழர்களின் எதிர்கால இருப்பு தொடர்பாக கலந்துரையாடல்

In இலங்கை
Updated: 05:06 GMT, Jan 4, 2018 | Published: 05:04 GMT, Jan 4, 2018 |
0 Comments
1114
This post was written by : Elakkiya

கிழக்கு மாகாண தமிழர்களின் எதிர்கால அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. மட்டக்களப்பு கல்லடி உப்போடையில் அமைந்துள்ள துளசி மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு இந்த கலந்துரையாடல் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2007 ஆம் ஆண்டு நீதிமன்ற தீர்ப்பின் மூலம் பிரிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாண தமிழர்களின் சமூக பொருளாதார இருப்பு நாளாந்தம் கேள்விக்குறியாகி வருவதை அவதானிக்க முடிகின்றது.

இதனை தடுத்து நிறுத்தவோ அல்லது மாற்று வழியை தேடும் அக்கறையோ அல்லது அதற்கான அரசியல் வல்லமையோ தற்போதைய தமிழ் மக்களின் அரசியல் தலைமைகளிடம் இல்லை என்பதும் அண்மைய அரசியல் நிகழ்வுகள் நிரூபித்துக் காட்டியுள்ளன.

இந்நிலையில், கிழக்கு மாகாண தமிழர்கள் தமது எதிர்கால இருப்பை பாதுகாத்து பேணுவதற்குரிய அரசியல் பொறிமுறைக்கான அடித்தளத்தை எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் காலத்தில் ஏற்படுத்த வேண்டிய தேவைப்பாடு ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் மேற்படி கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg