Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐரோப்பாவை தாக்கியுள்ள கொடிய எலினர் புயல்: மூவர் உயிரிழப்பு

In உலகம்
Published: 04:35 GMT, Jan 4, 2018 |
0 Comments
1297
This post was written by : Risha
_99452161_043822474-1

வட ஐரோப்பாவின் பெரும்பகுதியை தாக்கிய குளிர்கால எலினர் புயலில் சிக்கி மூவர் உயிரிழந்ததுடன், கடுமையான பாதிப்புகளையும் விளைவித்துள்ளது.

பிரான்ஸ் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் ஒருவர் உயிரிழந்ததுடன், 15 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களுள் நால்வரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, ஸ்பெயினின் வடக்கு பாஸ்க் கடற்கரையில் பாரிய அலைகளில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு மின்தடையையும் போக்குவரத்து தடையையும் ஏற்படுத்தி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்த எலினர் புயல் தற்போது வட ஐரோப்பாவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

வடக்கு பிரான்ஸில் புயல் பாதிப்பு காரணமாக சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் இருளில் மூழ்கியுள்ளதுடன், இந்த புயல் தாக்கமானது பிரான்ஸின் தென்கிழக்கு பகுதியான குரோஷியா உள்ளிட்ட ஏனைய பிராந்தியங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

புயல் தாக்கத்தினால் தலைநகர் பரிஸ் மற்றும் கிழக்கு பகுதிகளில் விமான போக்குவரத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரித்தானியாவில் மணிக்கு 160 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த புயல் காற்று வீசியிருந்த நிலையில், பிரான்ஸில் மணிக்கு 147 கிலோமீற்றர் வேகத்தில் புயல் காற்று வீசி வருகின்றது. இந்நிலையில், பரிஸின் அடையாள சின்னமாக விளங்கும் ஈபெல் கோபுரம் மூடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

_99451572_043820957-1 _99454817_44a096e4-0630-46b1-a72f-b2db1459f9a4 _99454819_mediaitem99454818

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg