Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பென்னான், பதவியுடன் அறிவையும் இழந்துள்ளார்: ட்ரம்ப் சாடல்

In உலகம்
Published: 05:10 GMT, Jan 4, 2018 |
0 Comments
1131
This post was written by : Risha

வெள்ளை மாளிகையின் முன்னாள் ஆலோசகரான ஸ்டீவ் பென்னான், தனது பதவியுடன் அறிவையும் இழந்துள்ளார் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சாடியுள்ளார்.

ட்ரம்பின் மூத்த மகன் ரஷ்யக் குழுவினருடன் மேற்கொண்டிருந்த சந்திப்பை தேசத் துரோகம் என ஸ்டீவ் பென்னான் விமர்சித்திருந்தார். இந்நிலையில் இது தொடர்பாக ட்ரம்ப் நேற்று (புதன்கிழமை) வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் ட்ரம்ப் மேலும் தெரிவித்துள்ளதாவது, ”எனக்கோ, எனது பதவிக்கோ பென்னானினால் எதனையும் செய்ய முடியாது. அவர் பதவி நீக்கம் செய்யப்பட்ட போது பதவியை மாத்திரம் இழக்கவில்லை. பதவியுடன் அறிவையும் இழந்துள்ளார்” என்றார்.

2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற சந்திப்பின்போது ஹிலரி கிளிண்டன் குறித்த தவறான தகவல்களை ட்ரம்பின் மகனிடம் ரஷ்யர்கள் வழங்கியதாகவும் பென்னான் குறிப்பிட்டுள்ளார்.

பென்னானின் இக்கருத்துக்கள், ஊடகவியலாளர் மைக்கல் வொல்ஃப் எழுதிய புதிய புத்தகத்தில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg