Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நுவரெலியா பிரதான வீதியில் 300 அடி பள்ளத்தில் வீழ்ந்து வான் விபத்து

In இலங்கை
Updated: 09:13 GMT, Jan 4, 2018 | Published: 05:33 GMT, Jan 4, 2018 |
0 Comments
1107
This post was written by : Elakkiya

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் 300 அடி பள்ளத்தில் வீழ்ந்து வான் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

நேற்று (புதன்கிழமை) இரவு 11 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பிட்டு பின் மேலதிக சிகிச்சைகளுக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

ருவான்வெல்ல பகுதியிலிருந்து நுவரெலியா பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. வானில் பயணித்த 23 மற்றும் 18 வயதுடைய இரண்டு பெண்களே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.

வானின் சாரதி லிந்துலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளும் இடம்பெற்றுவருகின்றன.

vlcsnap-2018-01-04-03h02m49s063 (1)
vlcsnap-2018-01-04-03h03m01s690
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg