Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமெரிக்காவில் தங்கியிருப்பதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும்: நவாஸ் ஷெரீப்

In உலகம்
Published: 05:49 GMT, Jan 4, 2018 |
0 Comments
1651
icon_com
This post was written by : Risha

அமெரிக்காவின் உதவியில் தமது நாடு தங்கியிருப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான பாகிஸ்தானின் உறுதிபாட்டை விமர்சிக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கருத்திற்கு பதிலளிக்கும் வகையில் நேற்று (புதன்கிழமை) இவ்வாறு குறிப்பிட்டார்.

புத்தாண்டில் ட்ரம்ப் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், அமெரிக்கா முட்டாள்தனமாக கடந்த 15 ஆண்டுகனாக எவ்வித பிரதிபலனையும் எதிர்பாராது பாகிஸ்தானுக்கு 33 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான தொகையை வழங்கியுள்ளது. அதனை நிறுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

நேற்று இடம்பெற்ற சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கருத்தானது வருந்தத்தக்கது. ஒருநாட்டு தலைவர் பிற நாடு குறித்து விமர்சிக்கையில், சர்வதேச விதிமுறைகள் மற்றும் ராஜதந்திர விதிகள் குறித்து அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

எமது கட்சி ஆட்சியில் இருந்தபோது பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான வலுவான தீர்மானங்கள் பலவற்றை நாங்கள் வெளிப்படுத்தியிருந்ததை ட்ரம்ப் நன்கறிவார்” என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg