Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சகல உரிமைகளையும் பெற்றுக் கொள்ள ஐ.தே.கட்சிக்கு வாக்களியுங்கள்: பழனி திகாம்பரம்

In இலங்கை
Updated: 09:29 GMT, Jan 4, 2018 | Published: 05:51 GMT, Jan 4, 2018 |
0 Comments
1376
This post was written by : Elakkiya

தனிவீடு, காணி உரிமை வீட்டு உரிமை, ஒப்பனைப் பத்திரம் மற்றும் பிரதேச சபைகள் அதிகரிப்பு என் மலையகத்தில் கடந்த மூன்று வருட காலப்பகுதியில தமிழ் முற்போக்கு கூட்டணி சாதனை படைத்துள்ளதாக மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் மஸ்கெலியா பிரதேச சபைக்கு போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, “தோட்டங்களை அபிவிருத்தி செய்தது போன்று நகரங்களையும் அபிவிருத்தி செய்ய வேண்டும்.  கடந்த 200 வருட காலமாக ஹட்டன் புகையிரத நிலையத்தினால் அமைக்கப்பட்ட தகர வேலியினை அகற்ற முடியாது வீதி குறுகி காணப்பட்டது. எவராலும் முடியாத விடயத்தினை நான் செய்து காட்டியிருக்கின்றேன். இன்று தகரங்கள் அகற்றி வீதி அகலமாக்கப்பட்டுள்ளது.

அதே போன்றே மஸ்கெலியா நகரமும். எனவே ஐக்கிய தேசிய கட்சியை வெற்றிப்பெற செய்வதன் மூலம் சகல உரிமைகளை பெற்றுக்கொள்ள முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பி. திகாம்பரம், பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ், மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சோ. ஸ்ரீதரன், ஆர். இராஜாராம் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி பொதுச் செயலாளர் ஏ. லோறன்ஸ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

02 (2) 01 (2)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg