Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளர்!

In கிாிக்கட்
Published: 06:12 GMT, Jan 4, 2018 |
0 Comments
1131
This post was written by : Anojkiyan
dc-Cover-6no8si82u8ab7na41tgd68qns1-20160914110425.Medi

கிரிக்கெட் உலகில் வளர்ந்து வரும் அணியான ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளராக பில் சிம்மோன்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன்படி அவர் எதிர்வரும் 8ஆம் உத்தியோகபூர்வமாக ஆப்கானிஸ்தான் அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் லால்சந் ராஜ்புட் பயிற்சியாளராக செயல்பட்டுவந்த நிலையில், அவரது செயற்பாடுகளில் திருப்திகொள்ளாத ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை அவரை அதிரடியாக அண்மையில் பதவி நீக்கியது.

இந்தநிலையில் மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் வீரரும், தலைமை பயிற்சியாளருமாக செயல்பட்ட பில் சிம்மோன்ஸ் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் அந்தஸ்தை பெற்றுக்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணிக்கு பில் சிம்மோன்ஸ் புதிய பயிற்சிகள் மற்றும் ஆலோசனைகள் பெரிதும் உதவும் என எதிர்பார்ப்பதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg