Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சமூக ஜனநாயக் கட்சியுடன் இணைந்து ஆட்சியமைக்க கிறிஸ்தவர் சமூக ஒன்றியம் விருப்பம்

In ஐரோப்பா
Updated: 06:51 GMT, Jan 4, 2018 | Published: 06:51 GMT, Jan 4, 2018 |
0 Comments
1096
This post was written by : Risha

சமூக ஜனநாயக் கட்சியுடன் இணைந்து கூட்டணி அரசாங்கத்தை அமைக்க விரும்புவதாக ஐரோப்பாவின் கிறிஸ்தவ ஜனநாயக மற்றும் பழமைவாத கட்சியான பவேரிய கிறிஸ்தவர் சமூக ஒன்றியம் அறிவித்தள்ளது.

சமூக ஜனநாயக் கட்சி உறுப்பினர்களுடன் கலந்துரையாடும் வகையில் பேர்லினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒன்றுகூடியபோது பவேரிய முதலமைச்சர் ஹோர்ஸ் சீஹொஃபர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ஐரோப்பாவின் கிறிஸ்தவ ஜனநாயக மற்றும் பழமைவாத கட்சி, சமூக ஜனநாயக் கட்சியுடன் இணைந்து அரசமைக்க ஆர்வமாக உள்ளோம்.

அதற்கான பேச்சுவார்த்தை தொடர்பாக ஆராய்ந்து வருகின்றோம். பேச்சுவார்த்தையின் மூலம் நியாயமாக உடன்பாடொன்றை எட்டுவதற்கு தயாராகவுள்ளோம்.

அனைத்தும் சாதகமான முறையில் நடைபெறுமாயின் கூட்டணி அரசாங்கம் வெகுவிரைவில் அமைக்கப்படும் என்றார்.

அஞ்சலோ மெர்க்கல் தலைமையிலான ஜேர்மனியின் கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியம், சமூக ஜனநாயக் கட்சி மற்றும் பவேரிய கிறிஸ்தவர் சமூக ஒன்றியம் ஆகியவற்றிற்கிடையிலான பேச்சுவார்த்தை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg