Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இ.போ.ச. ஊழியர்கள் யாழ்.நகரில் போராட்டம்!

In இலங்கை
Updated: 07:00 GMT, Jan 4, 2018 | Published: 06:58 GMT, Jan 4, 2018 |
0 Comments
1164
This post was written by : Elakkiya

இலங்கை போக்குவரத்துச் சபையின் வட பிராந்திய இணைந்த தொழிற்சங்க ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், இலங்கை போக்குவரத்து சபையின் யாழ். மாவட்ட ஊழியர்களும் யாழ்.பேரூந்து நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபையின் தனித்துவத்தை இல்லாதொழிக்கும் தீர்மானத்தை கண்டித்தும், வட பிராந்திய தொழிற்சங்க ஊழியர்களை அவமதித்து வெளியேற்றியமை, இலங்கை போக்குவரத்;துச் சபைக்கு எதிராக பக்கச்சார்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்படுதல், மற்றும் வவுனியா பேருந்து நிலையத்தை பறித்தெடுக்க உத்தரவிட்டமை ஆகியவற்றை கண்டித்து இப்போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

வவுனியா புதிய பேரூந்து தரிப்பிடத்தில் அரச மற்றும் தனியார் பேரூந்துகள் சேவையை ஆரம்பிக்க வேண்டுமென முதலமைச்சர் அறிவித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த திங்கட்கிழமை முதல் வட பிராந்திய இணைந்த தொழிற்சங்க ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் வட.மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் மற்றும் இலங்கை போக்குவரத்து சபையின் விசேட குழுவினருக்கு இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் இணக்கம் காணப்பட்டதாகவும் நேற்று நண்பகலுடன் போராட்டம் கைவிடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.

எனினும் உயர்மட்ட அதிகாரிகளுடனான சந்திப்பில் ஏற்படுத்தப்பட்ட இணக்கப்பாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவிக்கும் தொழிற்சங்க ஊழியர்கள் இன்றும் தமது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் வட. பிராந்திய இணைந்த தொழிற்சங்க ஊழியர்களின் போராட்டத்துக்கு இன்று தீர்வு எட்டப்படாத பட்சத்தில் நாளை முதல் கிழக்கு மாகாண இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களும் போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

IMG-6101 IMG-6099 IMG-6098 IMG-6097

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg