Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சாதனைக்கு காத்திருக்கும் புதுமாப்பிள்ளை!

In கிாிக்கட்
Published: 07:00 GMT, Jan 4, 2018 |
0 Comments
1063
This post was written by : Anojkiyan
vir

புதிதாக திருமணம் ஆன இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லிக்கு தென்னாபிரிக்காவில் புதிய சாதனையொன்று காத்திருக்கின்றது.

அதிக டெஸ்ட் போட்டிகளில் வெற்றிபெற்ற அணித்தலைவர்களில் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலியின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பே கோஹ்லிக்கு காத்திருக்கிறது.

சவுரவ் கங்குலி அணித்தலைவராக 49 போட்டிகளில், 21 வெற்றிகளைப் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார். விராட் கோஹ்லி 32 போட்டிகளில், 20 போட்டிகளை வென்றுள்ளார்.

இந்நிலையில் தென்னாபிரிக்காவில் நடைபெறவுள்ள மூன்று போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில், இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் கோஹ்லி, கங்குலியின் சாதனையை முறியடிப்பார்.

அணித்தலைவராக அதிக டெஸ்ட் வெற்றி என்ற பெருமை, மகேந்திர சிங் டோனி வசம் உள்ளது. அவர் 60 போட்டிகளில், 27 வெற்றிகளைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்று போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, நாளை கேப்டவுணில் ஆரம்பமாகவுள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டி செஞ்சுரியனில் 13ஆம் திகதியும், மூன்றாவது டெஸ்ட் போட்டி 24ஆம் திகதி ஜோகன்னஸ்பர்க்கிலும் நடைபெறவுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg