Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆட்சியை கவிழ்க்க மஹிந்த மறந்துவிட்டார்! – ராஜித சேனாரத்ன

In இலங்கை
Updated: 10:02 GMT, Jan 4, 2018 | Published: 07:16 GMT, Jan 4, 2018 |
0 Comments
1153
This post was written by : Puvanes
rajitha001

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அறிவிப்புகளைக் கண்டுகொள்ள வேண்டிய அவசியம் எதுவும் இல்லை என அமைச்சரவையின் இணைப் பேச்சாளரும் அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில், கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

2017ஆம் ஆண்டில் தற்போதைய நல்லாட்சியைக் கவிழ்த்து விடுவதாக மஹிந்த 2016ஆம் ஆண்டு சர்வதேச ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார் எனினும் 2018ஆம் ஆண்டும் மலர்ந்து விட்டதை அவர் மறந்து விட்டார்.

மஹிந்த கூறியவாறு ஆட்சியமைக்க அவர் மறந்துவிட்டார். இதன்படி அவரின் அறிவிப்புகளையும் சூளுரைகளையும் கண்டுகொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

எந்தவகையிலும் அவருக்கு ஆட்சியைக்கவிழ்க்க முடியாது. எனினும் அவர் தொடர்ந்தும் இதனையே கூறிவருகின்றார். உள்ளூராட்சி தேர்தல் பிரசாரத்தின் போதும் அவர் இதனையே தெரிவித்து வருகின்றார் என ராஜித மேலும் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg