Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அவுஸ்திரேலியாவில் விபத்துக்குள்ளான சீப் பிளேன் கண்டெடுப்பு

In
Updated: 07:09 GMT, Jan 4, 2018 | Published: 07:09 GMT, Jan 4, 2018 |
0 Comments
1203
This post was written by : JudeDanish

அவுஸ்திரேலிய சிட்னி ஆற்றில் சீ பிளேன் (ளநயிடயநெ) ஒன்று மூழ்கி விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக சிட்னி பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்தினையடுத்து மீட்புப் பணியாளர்கள் உயிரிழந்தவர்களின் சடலங்களையும் விமானத்தையும் மீட்டுள்ளனர்.

குறித்த விபத்துத் தொடர்பில் பொலிஸார் தெரிவிக்கையில், விமானம் பறக்க முற்பட்ட சிறிது நேரத்தில் சிட்னி ஆற்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியிருந்தது. இதனால் சுமார் 13 மீற்றர் ஆழத்திற்கு விமானம் பயணிகளுடன் மூழ்கியிருந்ததாக குறிப்பிட்டிருந்தனர்.

விபத்தில் பிரித்தானியாவைச் சேர்ந்த பிரபல உணவு தயாரிப்பு நிறுவனத்தின் முதன்மை அதிகாரி ரிச்சாட் கஸின்ஸ் உட்பட அவரது குடும்ப உறுப்பினர்களே உயிரிந்துள்ளதாக விபத்துத் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள சிட்னி விசேட ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

புதுவருட பிறப்பினைக் கொண்டாடும் வகையில் ரிச்சாட் கஸின்ஸ் குடும்பத்துடன் அவுஸ்திரேலியா சென்றிருந்த நிலையில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இதேவேளை ஆற்றில் மூழ்கிய விமானத்தை இயந்திரங்களின் உதவியுடன் பொலிஸார் மற்றும் மீட்பு பணியாளர்கள் ஆற்றில் இருந்து வெளியில் எடுத்துள்ளனர்.

விபத்துள்ளான விமானம் சோதனை நடவடிக்கைகளுக்கான அனுப்பி வைக்கபட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை சிட்னி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg