Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தென்னாபிரிக்காவை எதிர்கொள்ள தவான் தயாராகிவிட்டார்!

In கிாிக்கட்
Updated: 07:31 GMT, Jan 4, 2018 | Published: 07:29 GMT, Jan 4, 2018 |
0 Comments
1200
This post was written by : Anojkiyan

இடது கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்டுவந்த இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஷிகர் தவான், தென்னாபிரிக்க அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவது உறுதியாகிவிட்டது.

இதுகுறித்து இந்தியக் கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘ஷிகர் தவான் காயத்தில் இருந்து குணமடைந்து உடல்தகுதியை எட்டி விட்டார். முதலாவது டெஸ்ட் போட்டிக்கான அணித் தேர்வுக்கு அவர் தயாராக உள்ளார்’ என தெரிவித்துள்ளது.

தென்னாபிரிக்காவுக்கு புறப்படுவதற்கு முன்பாக டது கணுக்காலில் கட்டுப்போட்டிருந்தனால் தவான், முதலாவது டெஸ்டில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் நிலவியது. தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய இரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ஆனால், வைரஸ் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ள சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா, முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவது கேள்விக்குறியாகியிருக்கிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg