Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பீதியில் மஹிந்த! – ராஜபக்ஷ குடும்பத்திற்கு புதிய சிக்கல்

In இலங்கை
Published: 07:42 GMT, Jan 4, 2018 |
0 Comments
1610
This post was written by : Puvanes
mahinda001

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் குடும்பத்துடன் தொடர்புடைய டுபாய் வங்கிக் கணக்குகள் தொடர்பிலான விபரங்கள் கிடைத்துவிட்டதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எதிர்வரும் நாட்களில் இந்த விடயங்கள் அனைத்தும் வெளிப்படுத்தப்படும் எனக்குறிப்பிட்டுள்ள ராஜித, பொலிஸ் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் வெளிநாடுகளில் தங்கியிருந்து இந்த விபரங்ளை சேகரித்துள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த விடயம் காரணமாக ராஜபக்ஷ குடும்பத்தில் யார் சட்டத்தின் பிடியில் சிக்கப்போகின்றார்கள் என அவர்கள் பீதியில் உள்ளனர். இதனால் நாமல் ராஜபக்ஷவிற்கு கனவிலும் கணக்கு விபரங்கள் வந்து செல்லும் எனவும் ராஜித மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மத்திய வங்கியில் இடம்பெற்ற ஊழல் விடயம் தற்போது தீர்வுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக கருதப்படும் நிலையில் மஹிந்த குடும்பத்தாரின் ஊழல் விபரங்களை அம்பலப்படுத்தும் செயற்பாடுகளை அரசுதரப்பு மேற்கொண்டு வருவதாக குறிப்பிடப்படுகின்றது.

அதன்படி எதிர்வரும் நாட்களில் கடந்தகால ஆட்சியின் போது இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல்கள் தொடர்பான தகவல்கள் வெளிப்படுத்தப்படும் எனவும், இது மஹிந்தவை முடக்க அரசுதரப்பு திட்டமிடும் செயல் எனவும் அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg