Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பயங்கரவாத தடைச்சட்டம் மனித உரிமை மீறல்களுக்கு வழிகோலுகிறது! – தீபிகா உடகம

In இலங்கை
Published: 08:08 GMT, Jan 4, 2018 |
0 Comments
1266
icon_com
This post was written by : Varshini

இலங்கையில் தற்போதுள்ள பயங்கரவாத தடைச்சட்டமானது பாரதூரமான மனித உரிமை மீறல்களுக்கான சூழ்நிலையை ஏற்படுத்தித் தருவதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. ஒட்டுமொத்த சமூகத்திற்கு ஒரு ரணமாக அமைந்திருக்கின்ற இந்த பயங்கரவாத தடைச்சட்டம் மனித உரிமைகளை நிலைநிறுத்துகின்ற பாதுகாப்பு சட்டமாக மாற்றியமைக்கப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஆணைக்குழு தொடர்ந்தும் இருப்பதாக அதன் தலைவி கலாநிதி தீபிகா உடகம தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள மனித உரிமை ஆணைக்குழு தலைமையகத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எமது ஆதவன் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

குறிப்பாக, இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டம் மாற்றியமைக்கப்படவேண்டும் என மனித உரிமை ஆணைக்குழு முன்னர் அறிக்கை வெளியிட்டிருந்தது. எனினும் பல மாதங்களாகியும் அவ்வாறு இடம்பெறவில்லை. ஐ.நா. உட்பட பல தூதுக்குழுக்களும் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும் எனக்கூறியுள்ளன. இதுவிடயத்தில் மனித உரிமை ஆணைக்குழுவின் தற்போதைய நிலைப்பாடு என்ன என ஆதவன் செய்தியாளர் கேள்வியெழுப்பினார். இதற்கு அவர் பதிலளித்தபோது,

“இந்த ஆணைக்குழுவின் கடந்த இரண்டு ஆண்டு பதவிக் காலத்தில் நாம் பல கொள்கைகளுடன் தொடர்புடைய பரிந்துரைகளை வழங்கியிருக்கின்றோம்.

அதில் ஆரம்பத்தில் நாம் சமர்ப்பித்த பரிந்துரைகள், பயங்கரவாத தடைச் சட்டம் பற்றியதாகும். நாம் பயங்கரவாத தடைச்சட்டம் பற்றி முன்னர் தெரிவித்த கருத்துக்களை வலியுறுத்தி நிற்கின்றோம்.

ஒப்புதல் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளுதல், நீண்டகாலமாக ஒருவரை தடுப்பில் வைத்திருத்தல் போன்ற மனித உரிமைகளை மீறுகின்ற பல்வேறு பிரிவுகளைக் கொண்டிருக்கின்ற பயங்கரவாதச் சட்டமானது நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்தும் என்ற விடயத்துடன் நாம் இணங்கவில்லை.

இந்த விடயத்தில் நாம் அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை முன்வைத்து மனித உரிமைகளுடன் இணங்கிச் செல்கின்றதான பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்கத்தயார் எனக் கூறியிருந்தோம்.

பாரதூரமான வகையில் மனித உரிமைகளை மீறுவதற்கு இடமளிக்கின்ற சூழ்நிலைகளை ஏற்படுத்தித் தருகின்ற சட்டங்கள் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் ஒரு ரணமாக அமைந்திருக்கின்றது

அனைவரும் அதனால் பாதிப்படைகின்றனர். நாட்டில் புதிய அரசியல் நாகரீகத்தை ஏற்படுத்த நல்லதொரு சட்டக் கட்டமைப்பு அவசியமாகும்” என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)