Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நல்லிணக்கத்தை வென்றெடுக்க மக்களின் மனங்களை வெல்ல வேண்டும்: நஸீர் அஹமட்

In இலங்கை
Updated: 08:47 GMT, Jan 4, 2018 | Published: 08:46 GMT, Jan 4, 2018 |
0 Comments
1159
This post was written by : Elakkiya

நல்லாட்சி அரசாங்கம் நல்லிணக்கத்தை வென்றெடுக்க முதலில் மக்களின் மனங்களை வென்றெடுக்க வேண்டும் என்றும் அரசியல் அதிகாரப் பகிர்வின் மூலமே நாட்டில் வாழும் பல்லின சமூகங்கள் இணைய வழிவகை செய்யப்பட வேண்டும் என்றும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

சமகால அரசியல் முன்னெடுப்புக்கள் மற்றும் உள்ளூராட்சி தேர்தலில் சிறுபான்மையினரின் அரசியல் அந்தஸ்து தொடர்பாக இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது, இலங்கையில் இனமத நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப வேண்டுமாயின் நாட்டிலுள்ள அனைத்து சிறுபான்மை சமூக மக்களின் நம்பிக்கையையும் நல்லாட்சி அரசு பெற்றாக வேண்டும் என்றும் நாட்டு மக்கள் இன மத மொழி வேறுபாடின்றி தாம் சுதந்திரமாக பாதுகாப்பாக நிம்மதியாக இருக்கின்றோம் என்று எப்போது உணர்கின்றார்களோ அப்போதே நல்லிணக்கம் கட்டியெழுப்பப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “அரசியல் அதிகாரங்கள் சிறுபான்மை சமூகங்கள் மீது ஆதிக்கம் செலுத்தியதால் உண்டாகிய அழிவுதரும் விளைவுகளை நாடு அனுபவித்திருக்கின்றது. இத்தகைய துரதிஷ்ட நிலை இனியும் தொடரக் கூடாது. சிறுபான்மை மக்களான முஸ்லிம் தமிழ் சமூகங்கள் ஒரு போதும் நல்லிணக்கத்திற்கு தடையானவர்களாக இருந்ததில்லை.

இனிவரும் காலங்களில் இருக்கப் போவதுமில்லை. மக்கள் ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் நடத்த வேண்டிய சூழ்நிலைகளை உருவாக்காது சமத்துவமான பாரபட்டசமற்ற பகிர்ந்தளிக்கப்பட்ட அரசியல் அதிகார அரசாட்சி உறுதிப்படுத்தப்பட வேண்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg