Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மத்திய வங்கி ஊழல் தொடர்பான நாடாளுமன்ற விவாதம் அவசியம்! – மஹிந்த அமரவீர

In இலங்கை
Published: 08:40 GMT, Jan 4, 2018 |
0 Comments
1090
icon_com
This post was written by : Puvanes
mahinda amaraweera001

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மீதான நாடாளுமன்ற விவாதம் அவசியம் என ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி கேட்டுக் கொண்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (வியாழக்கிழமை) ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி ஊழல் தொடர்பிலான இறுதி அறிக்கை தொடர்பில் நேற்று (புதன்கிழமை) ஜனாதிபதி விஷேட அறிவிப்பினை வெளியிட்டார்.

குறித்த அறிக்கையில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜுன் மகேந்திரன், முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, அர்ஜுன் அலோசியஸ் ஆகியோர் மத்திய வங்கி ஊழலில் தொடர்புபட்டுள்ளதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் எழுந்துள்ள நிலையில், ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பிலான பாராளுமன்ற விவாதம் அவசியம் என சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)