Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புதிய திரைப்படம் ஒன்றில் நாயகனாக அறிமுகமாகும் தொலைக்காட்சி தொகுப்பாளர்!

In சினிமா
Updated: 09:17 GMT, Jan 4, 2018 | Published: 09:15 GMT, Jan 4, 2018 |
0 Comments
1182
This post was written by : Surenth

‘அஜித் ஃப்ரம் அருப்புக்கோட்டை’ திரைப்படத்தில் விஜய் தொலைக்காட்சியின் தொகுப்பாளர் ஒருவர் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2016ஆம் ஆண்டு மலையாளத்தில் புதுமுகங்கள் நடித்து வெளியான ‘கட்டப்பனையிலே ரித்விக் ரோஷன்’ என்ற திரைப்படமே தமிழ் மொழிக்கு ரீமேக் செய்யப்படவுள்ளது.

‘கட்டப்பனையிலே ரித்விக் ரோஷன்’ திரைப்படத்தை இயக்கியுள்ள நாதிர்ஷா ‘அஜித் ஃப்ரம் அருப்புக்கோட்டை’ திரைப்படத்தையும் இயக்கவுள்ளார்.

இந்தத் திரைப்படத்தில், ‘கட்டப்பனையிலே ரித்விக் ரோஷன்’ திரைப்படத்தில் கதாநாயகனின் நண்பராக நடித்த கொமெடி நடிகரான தர்மஜன் போல்காட்டி தமிழ் ரீமேக்கிலும் அதே பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg