Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரதமர் மீது இலக்கு! – ரவி கருணாநாயக்க தரப்பின் தகவல்

In இலங்கை
Updated: 10:02 GMT, Jan 4, 2018 | Published: 09:15 GMT, Jan 4, 2018 |
0 Comments
1315
icon_com
This post was written by : Puvanes
ravi001

மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடி தொடர்பாக முன்னாள் நிதியமைச்சர் ரவி கருநாணாயக்க மீது மட்டும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதை எவ்வகையிலும் அனுமதிக்க முடியாது என ரவி கருணாநாயக்கவின் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் இன்று (வியாழக்கிழமை) கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து வழங்கும் போதே அவர்கள் இதனைக் கூறியுள்ளனர்.

மேலும், மத்திய வங்கியில் ஊழல் இடம்பெற்றதாக கூறப்படும் காலப்பகுதியில் மத்திய வங்கி ரவி கருணாநாயக்கவின் கட்டுப்பாட்டில் இருக்கவில்லை எனவும் ரவி கருணாநாயக்கவின் வழக்கறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

எனவே 11145 மில்லியன் ரூபா ஊழலுக்கு ரவி கருணாநாயக்கவின் மீது மட்டும் குற்றம் சுமத்துவது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனக் குறிப்பிட்டுள்ள அவர்கள், இந்தவிடயத்தில் பொய்சாட்சிகள் வழங்கப்பட்டுள்ளன அதன்படி சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுப்போம் எனவும் தெரிவித்துள்ளனர்.

அதேபோன்று நல்லாட்சி ஆரம்பித்தன் பின்னர் ஆரம்ப காலத்தில் மத்திய வங்கி பிரதமர் ரணிலின் கட்டுப்பாட்டுக்கு கீழேயே இருந்ததாகவும் ரவி கருணாநாயக்கவின் வழக்கறிஞர்கள் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)