Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்திய மீனவர்களுக்கு 18 ஆம் திகதிவரை விளக்கமறியல் (2 ஆம் இணைப்பு)

In இலங்கை
Updated: 11:01 GMT, Jan 4, 2018 | Published: 09:48 GMT, Jan 4, 2018 |
0 Comments
1118
This post was written by : Elakkiya

அத்துமீறி மீனிபிடியில் ஈடுபட்டதாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 13 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 18 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்று (புதன்கிழமை) கைது செய்யப்பட்ட 13 மீனவர்களும் இன்று ஊர்காவல்துறை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 13 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 13 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களில் இரண்டு மீன்பிடிப் படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்று (புதன்கிழமை) மாலை இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்ட 13 மீனவர்களும் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டு இன்று காலை  யாழ்ப்பாண கடற்தொழில் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் மீது சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

03 (4) 02 (4) 01 (4)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg