முதல் நாளே ஆழ்ந்த நித்திரையில் இலங்கை வீரர்: குமுறும் இரசிகர்கள்

தோல்வியால் துவண்டு போயுள்ள இலங்கை வீரர்களுக்கு புத்துணர்வு ஊட்டும் செயற்பாடாக இலங்கை அணியின் புதிய பயிற்சியாளர் சந்திக்க ஹத்துருசிங்க முன்னெடுத்துள்ள முதற் செயற்பாடே வெற்றி அளிக்குமா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.
இலங்கை அணி வீரர்களுக்கு ஆலோசனை வழங்க, அவுஸ்ரேலியாவை சேர்ந்த செயல்திறன் உளவியலாளர் பில் ஜோன்சேவினால் இன்று (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்ட உளவியல் பயிற்சி பட்டறையின் போது, இளம் வீரரான குசல் மெண்டிஸ் ஆழ்ந்த நித்திரையில் இருக்கும் வகையிலான புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவிவருகின்றது.
இந்நிலையில் குறித்த புகைப்படம் தற்போது முன்னணி சமூகவலைதளங்களில் காரசாரமாக விவாதிக்கப்பட்டுவருகின்றது.
பல்வேறான நெருக்கடிக்கு மத்தியில் இருக்கும் இலங்கை அணி வீரர்கள், எழுச்சி பெற வேண்டுமென முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்களுக்கும் ஒத்துழைப்பு வழங்குவதில்லை எனவும் இவர்களது அழற்சிய போக்கே இலங்கை அணியின் தொடர் தோல்விகளுக்கு காரணம் எனவும் இணையவாசிகள் காரசாரமாக விமர்சித்து வருகின்றனர்.