Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தவறிழைத்தவர்கள் யாராயினும் தண்டனை வழங்கப்படும்: அர்ஜூண ரணதுங்க

In இலங்கை
Updated: 10:55 GMT, Jan 4, 2018 | Published: 10:52 GMT, Jan 4, 2018 |
0 Comments
1093
icon_com
This post was written by : Elakkiya
arjuna-415x260

தவறு செய்தவர்கள் யாராக இருப்பினும் உரிய தண்டனையை வழங்குவதற்கு ஜனாதிபதியும் பிரதமரும் தயாராக உள்ளதாக பெற்றோலிய வளங்கள் மற்றும் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூண ரணதுங்க தெரிவித்துள்ளார்.

பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கொலன்னாவை எரிபொருள் களஞ்சியசாலை நிலையத்தில் இடம்பெற்ற புத்தாண்டை வரவேற்கும் நிகழ்வின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “வரலாற்றில் இவ்வருடமே அதிக கடன்களை செலுத்த வேண்டிய வருடமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். ஆனாலும், எம்மால் முடிந்த அளவு இந்த கடன் பிரச்சினையை சரிசெய்ய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். கடன் சுமை நாட்டு மக்களுக்கு போய் சேராமலிருக்கவே நாங்கள் பல முயற்சிகளை மேற்கொள்கின்றோம். எமது அரசாங்கமும் அமைச்சரவையும் கடந்த இரண்டு வருடங்களாக கடன் பிரச்சினையை தீர்ப்பதற்கு கூடிய கவனம் செலுத்திவருகின்றன. அமைச்சரவை மட்டுமல்ல ஜனாதிபதியும் பிரதமரும் நாட்டை அபிவிருத்தி செய்ய பாரிய பங்களிப்பைச் செய்துள்ளனர்.

நான் அமைச்சு பதவியை பொறுப்பேற்ற பின்னர் ஏராளமான பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியிருந்தது. ஆனால் ஜனாதிபதியும் பிரதமரும் பிரதான இரண்டு கட்சிகளை இணைத்து, குறிப்பாக வடக்கு தெற்கு, சிங்களம் தமிழ் முஸ்லிம் என்று பாராது சகல மக்களையும் ஒன்றிணைத்து இந்த நாட்டை அபிவிருத்திப் பாதையில் கொண்டுவந்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

எனினும் அரசாங்கத்தில் சில குறைப்பாடுகள் இருப்பதாக தெரிவித்துள்ள அமைச்சர் அர்ஜூண ரணதுங்க எதுவாக இருப்பினும் எமது அரசாங்கமாகவே இருந்தாலும் தவறிழைத்தவர்களுக்கு தண்டனை உண்டு என்பதை ஜனாதிபதியும் பிரதமரும் உறுதிசெய்துவிட்டனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந் நிகழ்வில் பெற்றோலி வளங்கள் அவிபிவிருத்திப் பிரதியமைச்சர் அனோமா கமகே மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தம்மிக ரணதுங்க ஆகியோரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)