Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரெக்சிற்றின் பின்னர் விவசாயிகளுக்கு மானியம்: மைக்கல் கோவ் உறுதி

In
Updated: 11:05 GMT, Jan 4, 2018 | Published: 11:04 GMT, Jan 4, 2018 |
0 Comments
1176
This post was written by : Risha

சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடைமுறைகளை மேம்படுத்தும் வகையில் பிரெக்சிற்றின் பின்னர் விவசாயிகளுக்கு மானியங்கள் வழங்கப்படவுள்ளதாக, சுற்றாடற்துறை அமைச்சர் மைக்கல் கோவ் தெரிவித்துள்ளார்.

ஒக்ஸ்ஃபோர்ட் வேளாண்மை மாநாட்டில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”விவசாய பொருட்களுக்கான மானியங்கள் அற்ற நிலையில், அத்துறையிலிருந்து பலரும் விலகிச் செல்கின்றனர். இந்நிலையில், அவ்வாறு விலகிச்செல்லும் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் ஒரு புதிய முறையை நான் உருவாக்க விரும்புகிறேன் என்றார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கு ஆதரவாக பிரசாரம் செய்துவந்த மைக்கல் கோவ், ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு பிரித்தானியா வெளியேறுவது சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்த அனுமதிக்கும் என்றும் பசுமை தரத்தை பலவீனப்படுத்தாது என்றும் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg