Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நாடாளுமன்றத்தினை கலைத்து பிரதமரை மாற்றுங்கள்! – கூட்டு எதிர்கட்சியின் கோரிக்கை

In இலங்கை
Updated: 11:00 GMT, Jan 4, 2018 | Published: 10:52 GMT, Jan 4, 2018 |
0 Comments
1484
This post was written by : Puvanes

இனியும் பொறுமை வேண்டாம் உடனடியாக நாடாளுமன்றத்தை கலைத்து புதிய பிதரமரை தெரிவுசெய்ய வேண்டும் என ஒன்றிணைந்த கூட்டு எதிர்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் இன்று (வியாழக்கிழமை) கூட்டு எதிர்கட்சியினர் நடத்திய ஊடகசந்திப்பின் போதே குறித்த கோரிக்கையினை அவர்கள் விடுத்துள்ளனர்.

மேலும், தற்போதைய நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் முறைகேடுகள் அம்பலமாகியுள்ளது இதனால் இனிமேலும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து பயணிப்பது சுதந்திரக்கட்சிக்கு அவமானம் எனவும் கூட்டு எதிர்கட்சியினர் கூறியுள்ளனர்.

எனவே இந்த விடயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன உடனடியாக கவனத்தில் எடுத்து தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, மத்திய வங்கி ஊழல் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை வெளியானதன் பின்னர் பிரதமர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg