Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரஜினியை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன்: அழகிரி

In இந்தியா
Updated: 13:07 GMT, Jan 4, 2018 | Published: 11:32 GMT, Jan 4, 2018 |
0 Comments
1158
This post was written by : Kemasiya

நடிகர் ரஜினிகாந்தை சந்திப்பதற்கு தான் நேரம் கேட்டுள்ளதாக தமிழகத்தின் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.

கலைஞர் கருணாநிதியை அவரின் போபாலபுர இல்லத்தில் சந்தித்து வருடப்பிறப்பு வாழ்த்துக்களை தெரிவித்த பின்னர், ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த  அழகிரி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர்,

“ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்தை நான் வரவேற்கிறேன். அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிப்பதற்காக நேரம் கேட்டுள்ளேன். அத்துடன் கருணாநிதி சுகமாக உள்ளார். அவரை சந்தித்து ஆசி பெற்றதில் மிக்க மகிழ்ச்சி” என அவர் தெரிவித்திருந்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg