Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பல ஆண்டுகளின் பின்னர் ஆயுததாரிகளால் விடுவிக்கப்பட்ட கனேடியர் பொலிஸாரால் கைது!

In கனடா
Published: 11:53 GMT, Jan 4, 2018 |
0 Comments
1048
This post was written by : Anojkiyan
2.o.jpeg - Copy (2)

ஆப்கானிஸ்தானில் மனைவி மற்றும் பிள்ளைகளுட்ன ஆயுததாரிகளால் கடத்தப்பட்டு பல ஆண்டுகளின் பின்னர் அண்மையில் விடுவிக்கப்பட்ட கனேடியர் ஒட்டாவா பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

34 வயதான ஜேஷுவா போயெல் எனப்படும் கனேடியரே இவ்வாறு ஒட்டாவாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கனேடியர் மீது பாலியல் தாக்குதல், கட்டாய தடுத்துவைப்பு உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதையடுத்தே அவர் இவ்வாறு கைதாகியுள்ளார்.

எனினும், இவரது கைது குறித்த விபரங்கள் எதனையும் வெளியிடுவதற்கு ஒட்டாவா பொலிஸார் மறுத்துள்ளனர்.

ஜேஷுவா போயெலும் அமெரிக்கரான இவரது மனைவியும் தலிபான்களுடன் தொடர்புடைய ஆயுதக் குழுவினால் கடந்த 2012ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானில் வைத்து கடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg