Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிவப்பாக மாறும் நிலவு! – 150 வருடங்களின் பின்னர் வரும் அபூர்வம்

In அறிவியல்
Published: 12:43 GMT, Jan 4, 2018 |
0 Comments
5984
This post was written by : Puvanes
moon002

150 ஆண்டுகளின் பின்னர் நிகழும் அபூர்வ சந்திரக்கிரகணம் (Super Blue Moon eclipse) எதிர்வரும் ஜனவரி 31ஆம் திகதி நிகழவுள்ளது.

இந்தக்கிரணத்தின் போது நிலவு பிரகாசமாகவும், மிகப்பெரிய அளவிலும் தென்படும் அதேசமயம் நிலவின் கீழ்பகுதி மிகப்பிரகாசமாகவும், மேற்பகுதி பிரகாசம் குறைந்தும் காணப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், மொறீசியஸ் போன்ற நாடுகளில் இதனை தெளிவாக காணமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த சுப்பர் மூன் கிரகணமானது 1866ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் திகதி தோன்றியது அதன்பின்னர் 2018ஆம் ஆண்டிலேயே தோன்றவுள்ளது. அத்துடன் 2018ஆம் ஆண்டின் முதல் சந்திரக்கிரகணம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மற்றொறு பக்கம் இந்த அபூர்வ சந்திர கிரணத்தால் பூமியின் பசுபிக் கடற்பிராந்தியத்தில் கொந்தளிப்புகள் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பூமிக்கு மிக அருகில் நிலவு வருவதனால் அதன் ஆற்றல் காரணமான எரிமலைகள் வெடிக்கும் சாத்தியக்கூறுகளும் உண்டு என மேலைத்தேய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

வழமைக்கு மாறாக 14 சதவீதம் பெரிதான நிலவு தென்படும் எனவும் சிவப்பு நிறத்தில் நிலவு தென்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது, நிலவு சிவப்பாக தென்படுவது பூமிக்கான ஆபத்தின் அறிகுறி என மதக் கருத்துகள் தெரிவித்து வருவதால் இது தொடர்பில் வெளிவரும் செய்திகள் மக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

moon001

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg