Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மனித நடமாட்டமற்ற காட்டுப்பகுதியில் ஆணின் சடலம் கண்டெடுப்பு!

In
Updated: 14:47 GMT, Jan 4, 2018 | Published: 14:47 GMT, Jan 4, 2018 |
0 Comments
1181
This post was written by : Puvanes

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள தளவாய் கரையோரப்பிரதேச காட்டுப்பகுதி நீரோடையொன்றில் இருந்து சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இன்று (வியாழக்கிமை) கண்டெடுக்கப்பட்ட குறித்த சடலமானது 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவருடையது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மனித நடமாட்டமற்ற புதர்கள் நிறைந்த காட்டுப்பகுதியில் துர்வாடை வீசிய நிலையிலேயே சடலத்தினை மீட்டுள்ள பொலிஸார், இது கொலையா அல்லது நீரோடையில் தவறிவிழுந்து ஏற்பட்ட மரணமா என இது வரையிலும் ஊகிக்க முடியாத நிலையில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

தற்போதைய நிலையில் சம்பவம் தொடர்பாக மேலதிக விபரங்கள் எதுவும் தெரியாத சூழலில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

death002 death003

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg