Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜனாதிபதியின் அரசியல் வாழ்விற்கு ஆபத்து! – வடமாகாண ஆளுநரின் தகவல்

In இலங்கை
Updated: 15:25 GMT, Jan 4, 2018 | Published: 15:25 GMT, Jan 4, 2018 |
0 Comments
5559
This post was written by : Puvanes
gooray001

கடந்தகால ஊழல் தொடர்பாக அறிக்கைகளை வெளியிடுவது ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் அரசியல் வாழ்விற்கு ஆபத்தாக மாறிவிடும் என வடமாகாண ஆளுநர் ரெஜினால்ட் குரே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் கூறுகையில்,

நல்லாட்சி அரசாங்கம் ஊழல் தொடர்பாக பல விசாரணைப் பிரிவுகளை அமைத்து, விசாரணைகளைச் செய்து அவற்றை அறிக்கைகளாக வெளியிட்டு வருகின்றது.

மத்திய வங்கி ஊழல் விசாரணை அறிக்கை முடிவுகளை அறிவிக்கும் போது ஜனாதிபதி, கட்சி, பதிவி, அதிகாரம் என்பனவற்றை பார்க்காது யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என தெளிவாக குறிப்பிட்டிருந்தார்.

இந்த விடயத்தில் இரு கட்சிகைளைச் சேர்ந்தவர்களும் தொடர்புபட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டு வருகின்றது. அதன்படி இந்த விசாரணைகள் தொடர்பாக மைத்திரி எடுக்கும் தீர்மானங்கள் அவருடைய அரசியல் வாழ்வுக்கு ஆபத்தாகிவிடும்.

அதேபோன்று மைத்திரி தன் கட்சியில் உள்ளவர்களை காப்பாற்றிக்கொண்டு ஏனைய கட்சிகளில் உள்ளவர்களை தண்டித்துவருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவருகின்றன. எனினும் ஜனாதிபதி அனைத்து கட்சிகளையும் நிகராகவே நோக்குகின்றார்.

ஊடகங்களுக்கு உண்மைகளை வெளிப்படுத்தும் உரிமைகள் உண்டு அதேபோல் இந்த நேரத்தில் ஜனாதிபதிக்கு ஆதரவாகவே ஊடகங்கள் செயற்பட வேண்டும் எனவும் ரெஜினால்ட் குரே மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg