Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தாய்லாந்தின் வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்தார் சுஷ்மா

In இந்தியா
Published: 03:48 GMT, Jan 5, 2018 |
0 Comments
1145
This post was written by : Kemasiya

தென்கிழக்காசியாவிற்கான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், அதன் ஒரு கட்டமாக தாய்லாந்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் ‘டான் ப்ரமுட்வினை’ சந்தித்துள்ளார்.

தயாய்லாந்தின் தலைநகரில் (Bangkok) நேற்று (வியாழக்கிழமை) இரவு இடம்பெற்ற இந்தச் சந்திப்பில், சர்வதேச மற்றும் பிராந்தியப் பிரச்சினைகள் குறித்து பேசப்பட்டுள்ளதாக தாய்லாந்தின் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த மாத இறுதியில் டெல்லியில் இடம்பெறவுள்ள ஆசிய – இந்திய மாநாட்டில், தாய்லாந்தின் பிரதமர் கலந்து கொள்வது குறித்தும் இதன் போது கவனஞ்செலுத்தப்பட்டுள்ளது.

தாய்லாந்திற்கான இவ் விஜயத்தை தொடர்ந்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், சிங்கப்பூர் மற்றும் இந்தோனேசியாவிற்கு பயணம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)