Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜெயலலிதாவின் வீட்டை நினைவு இல்லம் ஆக்குவதற்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு!

In இந்தியா
Updated: 04:28 GMT, Jan 5, 2018 | Published: 04:28 GMT, Jan 5, 2018 |
0 Comments
1182
This post was written by : Kemasiya

ஜெயலலிதா வசித்த வீட்டை நினைவு இல்லமாக்குவதாக தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவு ரத்து செய்யப்பட வேண்டும் என்ற மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

ராமசாமி என்பவர் தாக்கல் செய்த இந்த மனு இன்று (வெள்ளிக்கிழமை) சென்னை உயர் நீதிமன்றில் விசாரணைக்கு வருகிறது.

குறித்த மனுவில், “சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளியென அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவு இல்லமாக அறிவித்திருப்பதும், பல கோடி ரூபா செலவு செய்து நினைவு இல்லமாக மாற்றுவதும் இயற்கை நீதிக்கு புறம்பானது. எனவே குறித்த உத்தரவை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜெயலலிதா வசித்த வீடு நினைவு இல்லமாக மாற்றப்படும் என கடந்த வருடம் (2017) ஓகஸ்ட் 17ஆம் திகதி தமிழக அரசு அறிவித்திருந்தது.

அவ்வாறு நினைவு இல்லமாக மாற்றுவதற்கான பணிகளையும் அரசு முன்னெடுத்து வருகிறது.

இந்நிலையில் குறித்த உத்தரவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg