Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யாழ். சிறுமி துஷ்பிரயோகம்: அடுத்த வாரம் தீர்ப்பு

In இலங்கை
Published: 04:27 GMT, Jan 5, 2018 |
0 Comments
1104
This post was written by : Varshini
jaffna-court-

யாழ். சாவகச்சேரி பகுதியில் சிறுமியொருவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் 9ஆம் திகதி வழங்கப்படுமென யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் அறிவித்துள்ளார்.

குற்றவாளிக்கு எதிராக ஏற்கனவே கடந்த 2014ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டிருந்த போதும், அவர் தலைமறைவாகியிருந்தார். மூன்று ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த சந்தேகநபர் கடந்த டிசம்பர் மாதம் 27ஆம் திகதி யாழ்ப்பாணம் பொலிஸாரல் கைதுசெய்யப்பட்ட நிலையில், அவருக்கெதிரான தண்டனை தீர்ப்பு எதிர்வரும் 9ஆம் திகதி வழங்கப்படுமென நீதிபதி இளஞ்செழியன் நேற்று (வியாழக்கிழமை) அறிவித்தார்.

அதுவரை எதிரியை யாழ்ப்பாணம் சிறையில் தடுத்து வைக்குமாறும் நீதிபதி இளஞ்செழியன் உத்தரவிட்டார்.

சாவகச்சேரியில் கடந்த 2007ஆம் ஆண்டு 16 வயதுக்குட்பட்ட சிறுமி ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டார். பாதிக்கப்பட்ட சிறுமியின் முறைப்பாட்டையடுத்து சந்தேகநபரும் அவருக்கு உதவிய ஒருவரும் கைது செய்யப்பட்டு சாவகச்சேரி நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

சந்தேகநபர்கள் இருவருக்கும் எதிரான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்ட பின்னர், சட்டமா அதிபர் திணைக்களத்தால் இவ்விருவருக்கும் எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மேல் நீதிமன்றில் நடைபெற்ற விசாரணைகளின் நிறைவில் 2014ஆம் ஆண்டு ஓகஸ்ட் 7ஆம் எதிரிகள் இருவரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு, முதலாம் எதிரிக்கு 10 வருட கால சிறைத்தண்டனையும் அவருக்கு உதவிய குற்றச்சாட்டில் இரண்டாவது எதிரிக்கு 5 வருட கடூழிய சிறைத்தண்டனையும் வழங்கி, யாழ். மேல் நீதிமன்றின் அப்போதைய நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் தீர்ப்பளித்தார்.

எனினும், தண்டனை அறிவிக்கப்பட்ட காலத்தில் முதலாம் எதிரி தலைமறைவாகியிருந்த நிலையில் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளார். இதனடிப்படையில், பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு மற்றும் தலைமறைவாகியமை ஆகியவற்றிற்காக எதிரிக்கு புதிதாக தண்டனை அறிவிக்கப்படவுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)