Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அஜித் படத்தில் நடிகை அதிதி பாலன்? – வைரலான புகைப்படம்!

In சினிமா
Published: 04:39 GMT, Jan 5, 2018 |
0 Comments
1100
This post was written by : Ravivarman
ப்க்ப்டக்த்க்க்ப்கப்ட்க்

அருவி படம் மூலம் பிரபலமான நடிகை அதிதி பாலன், அஜித் நடித்த படத்தில் ஏற்கனவே சிறிய வேடத்தில் நடித்திருக்கும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் வெளியாகி அனைத்து தரப்பு இரசிகர்களாலும் பாராட்டப்பட்ட படம் ‘அருவி’. அதிதி பாலன் நாயகியாக நடிக்க அருண் புருஷோத்தமன் இயக்கி இருந்த இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது.

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித், திரிஷா, அனுஷ்கா, அருண் விஜய் ஆகியோர் நடித்த ‘என்னை அறிந்தால்” படத்தில் ‘அருவி’ படத்தின் நாயகி அதிதி பாலன் நடித்துள்ளார் என்ற விடயம் தற்போது தெரியவந்துள்ளது.

‘என்னை அறிந்தால்” படத்தில் திரிஷாவுக்கு தோழியாகவும் பரதநாட்டியம் ஆடுபவர்களில் ஒருவராகவும் நடித்திருக்கிறார். தற்போது இந்தப் படத்தில் வரும் அதிதியின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)